‘சென்ட்ரல் விஸ்டா’என்பது புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட பல கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு வளாகம். கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில், கட்டுமானப் பணியாளர்கள், குடிமக்கள் நலன் கருதி, சென்ட்ரல் விஸ்டா திட்ட கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சென்ட்ரல் விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது.கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அங்கேயே தங்கியுள்ளனர்.கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.எனவே, கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.மேலும், இம்மனு உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டதாக கூறிய நீதிமன்றம், மனுதாரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததும் உத்தரவிட்டது.இந்நிலையில் அவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.