மன்னிப்பு கேட்ட குமார் விஸ்வாஸ்

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை “படிக்காதவர்கள்” என்று கூறியதற்காக குமார் விஸ்வாஸ் மன்னிப்பு கோரினார். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் நடைபெற்ற விக்ரமோத்சவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், “பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்று என்னுடன் பணிபுரியும் ஒரு ஆர்.எஸ்.எஸ் சிறுவன்  கேட்டான். நீங்கள் ராமராஜ்ஜிய அரசாங்கத்தை அமைத்துள்ளீர்கள் என்று நான் சொன்னேன், அதனால் பட்ஜெட்டும் ஒரே மாதிரியாக இருக்கும் என்றேன். ராமராஜ்ஜியத்தில் பட்ஜெட் இல்லை என்று அந்த சிறுவன் கூறினான், அதற்கு நான் அது உங்கள் பிரச்சனை. இடதுசாரிகள் தகவல் இல்லாதவர்கள் மற்றும் நீங்கள் படிக்காதவர்கள். இந்த நாட்டில் இரண்டு வகையான மனிதர்களுக்கு இடையேதான் சண்டை உள்ளது. ஒருவர் இடதுசாரிகள், அறிவில்லாதவர்கள், அவர்கள் எல்லாவற்றையும் படித்திருக்கிறார்கள், ஆனால் தவறாகப் படித்திருக்கிறார்கள், மற்றவர் (ஆர்.எஸ்.எஸ்) அவர்கள் படிக்கவில்லை” என்றும் கூறியிருந்தார். இதையடுத்து அவர் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார். இதையடுத்து குமார் விஸ்வாஸ், தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக ஒரு வீடியோ விளக்கத்தை வெளியிட்டார். அந்த வீடியோவில், விஸ்வாஸ் தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பையனைப் பற்றி அதில் பேசியதாக கூறினார். தற்செயலாக அந்த பையன் ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர். அவர் குறைவாகப் படிக்கிறார், அதிகமாகப் பேசுகிறார். நான் அவரை நிறைய படிக்க வேண்டும் என்று சொன்னேன். மேலும் இடதுசாரிகள் அறிவற்றவர்கள், நீ படிப்பறிவில்லாதவன் என்றேன். சில நண்பர்கள் அந்த விஷயத்தை தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டனர். நான் அப்படிச் சொன்னதாக எந்த நண்பரும் உணர்ந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார். இவர் ஒரு முன்னாள் ஆம் ஆத்மி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமோத்சவ் திட்டத்தின் கீழ் பிப்ரவரி 21 முதல் 23 வரை உஜ்ஜயினியில் ராம் கதா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அங்கு குமார் விஸ்வாஸ் ராம் கதா (கதை) விவரிக்கிறார்.