அன்வர்கான் வீட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்

ராஜஸ்தான் ஜோத்பூர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், ராஜஸ்தான் இன்று எல்லைப்புற பகுதியான பாட்மேரில் வசித்து வரும் புகழ்பெற்ற பாடகர் பத்மஸ்ரீ அன்வர்கான் வீட்டிற்கு சென்றார். சில மாதங்கள் முன்பு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் அன்வர்கானை சந்தித்த மோகன் பாகவத், அவருடைய வீட்டிற்கு வருவதாகக் கூறியிருந்தார். அதன்படி அவர் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி பாட்டுப்பாடி சிறப்பான வரவேற்பு அளித்தனர் அந்த குடும்பத்தினர்.