ஹிந்து விரோத மாநகராட்சி

திருநெல்வேலியின் பாளையங்கோட்டையில் வ.உ.சி மைதானம் பின்புறமுள்ள தெரு, பன்நெடுங்காலமாக அத்தெருவில் உள்ள பிரசன்ன விநாயகர் கோயில் பெயரால் ‘பிரசன்ன விநாயகர் கோயில் தெரு’ என  அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அத்தெருவில் திருநெல்வேலி மாநகராட்சியால் நிறுவப்பட்டுள்ள சாலை பெயர் பலகையில் ‘உணவு சாலை’ என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. திருக்கோயிலின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வகையிலும் ஹிந்து விரோத மனப்பான்மையிலும் மாநகராட்சி நிர்வாகம் இந்த பெயர் மாற்றத்தை செய்துள்ளதாகவே அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாநகராட்சியின் இச்செயலுக்கு, இந்துமுன்னணி இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநகராட்சி ஆணையர் இதில் தலையிட்டு அந்த சாலையின் பாரம்பரிய பெயரான ‘பிரசன்ன விநாயகர் கோயில் தெரு’ என பெயர் பலகை வைக்குமாறு இந்து முன்னணியினரும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.