மத்திய அரசு ‘அக்னிபத்’ என்ற முப்படைகளுக்கு ஆள் சேர்க்கும் திட்டத்தை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீஹார், உ.பி., உட்பட பல மாநிலங்களில் வன்முறை போராட்டங்கள் திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்டன. பீஹாரில் நடந்த போராட்டத்தில் பல ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு சொத்துக்கள், 2,000க்கும் மேற்பட்ட ரயில்கள் சேதம் அடைந்தன. பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், பீஹாரின் லக்கிம்புர் நகரில் மனஷியாம் தாஸ் என்ற இடதுசாரி நக்சலைட் பயங்கரவாதி பதுங்கியிருப்பதாக பீஹார் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மனஷியாம் தாஸ் கைது செய்யப்பட்டார். மனஷியாம் தாஸ், நக்சலைட் அமைப்புடன் நீண்டகாலம் தொடர்புடையவர். இதன் மூத்த தலைவர்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்தது. அக்னிபத் திட்டத்தை எதிர்த்து பீஹாரில் நடந்த போராட்டத்தின்போது, ரயில்களுக்கு தீ வைக்கும்படி, போராட்டக்காரர்களை இவரும், இவருடன் தொடர்புள்ளவர்களும் துாண்டிவிட்டது விசாரணையில் தெரியவந்தது’ என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.