சீனாவுக்கு எதிரான மற்றொரு ஆதாரம்

சீனாவில் உள்ள வூஹான் ஆய்வு கூடத்தில் இருந்து, கொரோனா வைரஸ் பரவியதாகவும் அதி திட்டமிட்டே பரப்பப்பட்டதாகவும் உலக நாடுகள் கூறிவருகின்றன. இந்நிலையில், சீனாவின் வூஹான் ஆய்வுக் கூடத்தில் கூண்டுக்குள் உயிருடன் அடைக்கப்பட்டுள்ள வௌவ்வால்களுக்கு விஞ்ஞானிகள் புழுவை உணவாக கொடுக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. உலக நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்க, சீனா திட்டமிட்டு கொரோனா வைரசை பரப்பியது, இது சீனா நடத்தியுள்ள உயிரி ஆயுத தாக்குதல் என்ற உலக நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு இந்த வீடியோ மேலும் வலு சேர்க்கிறது.