கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்கு வங்கத்தின் கூச் பிஹார் மாவட்டத்தில் அடாபரியில் உள்ள மரத்தில் பா.ஜ.க தொண்டரின் சடலம் மர்மமான முறையில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.இறந்தவரின் பெயர் அனில் பர்மன் என்றும் இதற்கு முன்பு திருணமூல் கட்சி குண்டர்கள் நடத்திய வன்முறையில் பர்மனின் வீடு தாக்கி அழிக்கப்பட்டதாகவும் உள்ளூர்வசிகள் கூறியுள்ளனர்.இந்த விவகாரம் குறித்து ஏ.பி.பி ஆனந்த் தொலைக்காட்சியில் பேசிய அப்பகுதி பா.ஜ.க தலைவர், ‘கூச் பிஹார் மாவட்டத்தில் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு ஆளும் கட்சி பழிவாங்குகிறது. காவல்துறை செயலற்ற தன்மையில் உள்ளது’ என தெரிவித்தார்.வங்கதேசத்தின் எல்லைக்கு அருகில் மேற்கு வங்கத்தில் உள்ளது கூச் பிஹார் மாவட்டம்.இங்கு முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றனர்.இங்கு சட்டவிரோத குடியேறிகள் அதிகம்.மாநிலத்தில் நடக்கும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் இங்கிருப்பவர்களால்தான் நிகழ்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின்போது அரசியல் வன்முறையின்போது, திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி தனது கட்சி குண்டர்களை மத்தியப் படைகளை முற்றுகையிட சொன்னார். அதனால் கூச் பிஹாரில், 350 பேர் கொண்ட ஒரு கும்பல், சி.ஐ.எஸ்.எஃப் படை வீரர்களை மூர்கமாகத் தாக்கி அவர்களின் ஆயுதங்களை பறிக்க முயன்றது.தற்காப்பு நடவடிக்கையாக, மத்திய படைகள் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.இதில், நான்கு பேர் உயிரிழந்தனர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.