அசாமில் பத்ருதீன் அஜ்மலின் ஏ.ஐ.யு.டி.எப் கட்சியை சேர்ந்த ஒரே ஹிந்து சட்டமன்ற உறுப்பினரான ஃபானி, அக்கட்சியை விடுத்து அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். முன்னதாக, காங்கிரசின் ரூபஜோதி குர்மி, சுஷாந்தா போர்கோஹெய்ன் ஆகியோர் பா.ஜ.கவில் இணைந்தனர் என்பதும் தற்போது அசாமில் பா.ஜ.கவில் இணைந்த மூன்றாவது எதிர்க்கட்சி எம்எல்ஏ ஃபானி என்பதும் குறிப்பிடத்தக்கது.