ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 14 வயது சிறுமி ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் இது ஒரு லவ் ஜிகாத் கொலை, அந்த சிறுமி கட்டிடத் தொழிலாளியான அர்மான் அன்சாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஏழை பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அந்த குழந்தையிடம் அர்மான் அன்சாரி பல மாதங்களாக பாலியல் சுரண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் கர்பமான அந்த சிறுமியை, அன்சாரி முதலில் கொன்று, பின்னர் ஒரு மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதுபோல காட்ட முனைந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதுபோன்ற குற்றவாளிகளுடன் உள்ளூர் காவல்துறை துணை ஆய்வாளர் தரோகா கைகோர்த்து இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, அர்மான் அன்சாரி மீது கற்பழிப்பு, கொலை, போக்சோ சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை கண்காணிப்பாளர் அம்பர் லக்ரா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்டின் தும்கா மற்றும் பாகூர் மாவட்டங்கள் மேற்கு வங்க எல்லையிலும், வங்கதேசத்தில் இருந்து 100 கி.மீ.க்கும் குறைவான தூரத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு லவ் ஜிஹாத் மட்டுமல்ல நில ஜிஹாத்தும் நடக்கிறது, இப்பகுதிகளில் உள்ள பல முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் பழங்குடியின பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களின் நிலங்களை பிடுங்கி நில ஜிஹாத்திலும் ஈடுபடுவதாக உள்ளூர் பழங்குடியின குழுக்கள் நீண்ட காலமாக புகார் கூறி வருகின்றன. இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜார்க்கண்ட் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பாபுலால் மராண்டி, “இந்த செய்தி உங்கள் ரத்தத்தை கொதிக்க வைக்கும். இந்த பழங்குடியின சிறுமி நேற்று அர்மான் அன்சாரியால் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்டதாக கூறப்படுகிறது. அர்மான் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், ஜார்கண்டில் மேலும் எத்தனை எத்தனை பழங்குடிச் சிறுமிகள் இதுபோன்ற அயோக்கியர்களால் பாதிக்கப்பட்டுள்ளார்களோ? இந்த சந்தால் பழங்குடி சிறுமிக்கு வெறும் 14 வயதுதான். அர்மானின் ஜிஹாதி ஆசைகளால் கொல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரம் சர்வதேச லவ் ஜிஹாத் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதற்கான வாய்ப்புகளையும் நிராகரிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.