மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக கிறிஸ்தவ மதமாற்ற மாஃபியாக்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றனர். மாநிலத்தில் தங்கள் மதமாற்ற நடவடிக்கைகளை தீவிரமாகத் தொடங்கியுள்ளனர். பொதுப் போக்குவரத்திலும், ஹிந்துக் கூட்டங்களிலும் கிறிஸ்தவ புத்தகங்களை விநியோகிப்பது முதல் கல்வி, அல்லது பணம் என்ற பெயரில் அவர்களை கவர்ந்திழுப்பது வரை, கிறிஸ்தவ மிஷனரிகள் மக்களை மதமாற்றம் செய்ய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் விடுவதில்லை. அப்படிப்பட்ட ஒரு சமீபத்திய சம்பவத்தில், ஒரு பெண் மிஷனரி மற்ற ஹிந்து பெண் பயணிகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை உள்ளூர் ரயிலில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேதங்கள் மற்றும் மகாபாரத ஆராய்ச்சியாளர் அன்ஷுல் பாண்டே இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதில், “மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உள்ளூர் ரயிலில் மிஷனரியை கொடூரமாக தாக்கினார், அவர்களுக்கு நாம் இப்படித்தான் பதிலளிக்க வேண்டும்! பெருமை மிக்க சனதானி!” என குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், கிறிஸ்தவ மதத்திற்கு மார்ற முயன்ற அந்த மிஷனரி பெண்ணை இரண்டு ஹிந்துப் பெண்களும் கடுமையாக கண்டித்தது பதிவாகியுள்ளது. அதில் ஒரு பெண், “ஹிந்துக்களான நாங்கள் ஏற்கனவே எங்கள் இருப்புக்காக போராடுகிறோம். மிஷனரிகள் எப்படி வேலை செய்வார்கள் என்று எனக்குத் தெரியும்” என்று பேசினார்.