தமிழக அரசின் பட்ஜெட் குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் 1. மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது. 2. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை. 3. தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது. 4. ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வியினை பயிலும் போது ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஆனால் இது ‘பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’செயல்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.