குரல்வலையை நெறிக்கும் ஆந்திர அரசு

விநாயகர் சதுர்த்தி விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு, கொரோனாவை காரணம் காட்டி அதீத கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், முன்னெச்சரிகை நடவடிக்கை என கூறி ஆந்திர மாநில பா.ஜ.க தலைவர் சோமு வீரராஜூ, மாநில பொதுச் செயலாளர் விஷ்ணுவர்தன் ரெட்டி, சத்ய குமார் ஆகிய முக்கியத் தலைவர்களை கைது செய்துள்ளது. இதற்கு பா.ஜ.க, ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தேசிய குரல்களையும் ஹிந்து குரல்களையும் ஒடுக்குவதில் மும்முரமாக இருக்கிறார் முதல்வர் ஜெகன் மோகன் என்று பா.ஜ.க தேசிய செயலாளர், சுனில் தியோதர் கூறியுள்ளார். கிறிஸ்தவரான ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வரானதில் இருந்து அங்கு ஹிந்துக்கள் மீதான அடக்குமுறைகள் அவரது தந்தையின் காலத்தைவிட மிகவும் அதிகமாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.