ஆந்திர தலைநகர் அரசியல்

ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டபோது, அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை அறிவித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஜெகன் மோகன் ரெட்டி, அமராவதி திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம், சட்டமன்ற தலைநகராக அமராவதி, நீதித்துறை தலைநகராக கர்னூல் என மூன்று தலைநகர திட்டத்தை முன்வைத்தார். இதனை எதிர்த்து மக்கள் 700 நாட்களாக போராடி வருகின்றனர். மேலும், இதனை எதிர்த்து நீதிமன்றத்தையும் எதிர்கட்சிகள் நாடின. சட்டமன்றத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய மசோதாவை ஜெகன் மோக ரெட்டி தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் திரும்பப் பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு ஆந்திர சட்டமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுது இனி சட்டமன்றத்தின் பக்கமே வரமாட்டேன் என்று சென்றுவிட்ட நிலையில், எதிர்கட்சிகளே இல்லை என ஜெகன் மோகன் ரெட்டி இருமாப்புடன் இருந்தார். இந்த போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெற்றதன் மூலம் ஆந்திர பா.ஜ.க அங்கு மக்களின் மனதில் இடம்பிடித்து விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனை சரியாக தக்கவைத்துக்கொண்டு ஆந்திர பா.ஜ.க செயல்பட்டால், இந்த வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். இனி அம்மாநிலத்தில் அடுத்த தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து பா.ஜ.க தலைமையில்தான் மற்ற கட்சிகள் கூட்டணி வைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.