தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசை, ஒன்றிய அரசு ஒன்று அழைப்பதை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ம.க நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசினார். அப்போது, அவர், ‘எங்களைப் பொறுத்தவரையில் மத்திய அரசு என்றுதான் நாங்கள் அழைப்போம். பெயரை மாற்றி அழைப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக தெரிவித்தது. ஆனால், தற்போது தேதி சொல்லவில்லை என்கின்றனர். அது ஆக்கப்பூர்வமான கருத்து இல்லை. தற்போதைய சூழலுக்கு ஒன்று அல்லது இரண்டு ரூபாய் வரை குறைக்கலாம்’ எனக் கூறினார்.