கொரோனா தடுப்பூசி குறித்து சந்தேகம் தெரிவித்த காங்கிரஸ், திருணமூல், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல எதிர்கட்சியினர் பின்னர் சத்தமில்லாமல் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தாங்கள் ஆளும் மாநிலத்தில் தடுப்பூசியை வைத்து மலிவான அரசியல் வியாபாரம் செய்தன காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகள். ஆனால் பிரதமர் மோடி, தனது உரையில் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இதனால், இவர்களின் மலிவான அரசியல் சித்துவிளையாட்டுகள் முடிவுக்கு வந்துள்ளது.
தடுப்பூசியை தனியாருக்கு விற்று லாபம் பார்த்த பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டது. நங்கள் தனியாக தடுப்பூசி வாங்கிக் கொள்கிறோம் என பேசி அரசியல் செய்த டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி, தமிழக தி.மு.க, மமதா பானர்ஜி தலைமையிலான திருணமூல் காங்கிரஸ் உள்ளிட்டோரின் தடுப்பூசி அரசியல் முடிவுக்கு வந்தது. ராஜஸ்தானிலும் ஜார்கண்டிலும் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் செய்த தடுப்பூசி வீணாக்குதல், பதுக்கல்கள் இனி காணாமல் போகும். மமதா கட்சியினர் அச்சடித்துக் கொடுத்த போலி தடுப்பூசி சான்றிதழுக்கு முடிவு கட்டப்பட்டது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் பழிபோடும் அரசியல் நிறுத்தப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகளின் டூல் கிட் அரசியல் முடிவுக்கு வந்தது. எதிர்கட்சிகளை வைத்து அமெரிக்க பைசர் நிறுவனம் நடத்திய அரசியல் விளையாட்டுகள் முடித்து வைக்கப்பட்டன. தடுப்பூசி குறித்த எதிர்மறை செய்திகளை மக்கள் மனதில் விதைத்து பிழைப்பு நடத்திய சார்பு ஊடகங்களின் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி என அனைத்து தடுப்பூசி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரதமர் மோடி.