அமெரிக்காவின்மசாசூசெட்ஸைச் சேர்ந்த டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான அர்செனல் கன்சல்டிங், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட நகர்ப்புற நக்சல் ஸ்டான் சுவாமியின் கணினியில் ஹேக்கர்களால் உள்ளிடப்பட்ட வேர்ட் மற்றும் பி.டி.எப் கோப்புகளைப் பயன்படுத்தி அவர் கைது செய்யப்பட்டார் என்றும், அவருக்கு எதிரான ஆதாரங்கள் மின்னஞ்சல்கள் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட செய்திகள் என்றும் கூறியிருந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரோனா வில்சன் மற்றும் சிரேந்திர காட்லிங் ஆகியோர் தொடர்பாகவும் ஆர்சனல் கன்சல்டிங் கடந்த ஆண்டு இதேபோன்ற கூற்றை கூறியது.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை, பிப்ரவரி மற்றும் ஜூலை 2021ல் இந்நிறுவனத்தின் கூற்றுக்களின் அடிப்படையில் இரண்டு செய்தி கட்டுரைகளை வெளியிட்டது.அதில், அவர்களின் கணினிகள் ஹேக் செய்யப்பட்டதாகவும், குற்றஞ்சாட்டக்கூடிய கடிதங்கள் லேப்டாப்பில் ஹேக்கர்களால் பதிக்கப்பட்டதாகவும் கூறியது. மேலும், சிவில் சமூகம் மற்றும் முக்கிய விமர்சகர்களுக்கு எதிரான இந்திய அரசாங்கத்தின் அடக்குமுறையை எடுத்துக்காட்டும் ஒரு வழக்கில் சுவாமி மற்றும் அவரது இணை பிரதிவாதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு இந்த பகுப்பாய்வு கூடுதல் சான்று என்றும் தெரிவித்தது.
டிசம்பர் 13 அன்று, பீமா கோரேகான் வழக்கில் நகர்ப்புற நக்சல் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டார்.பொதுவாக ஸ்டான் ஸ்வாமி என்று அழைக்கப்படும் ஸ்டான் லூர்துசாமி தனது 84வது வயதில் ஜூலை 4ஆம் தேதி காலமானார்.அவர் இறக்கும் போது பீமா கோரேகான் வன்முறை வழக்கில் விசாரணைக் கைதியாக இருந்தார்.
அர்செனல் கன்சல்டிங், கூற்றுப்படி, ஹேக்கர் “WinSCP, விண்டோஸுக்கான இலவச மற்றும் திறந்த மூல கோப்பு பரிமாற்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளார்.ஸ்டேன் சுவாமியின் கணினி மற்றும் நீக்கக்கூடிய சேமிப்பக சாதனங்களிலிருந்து 24,000 க்கும் மேற்பட்ட கோப்புகளை ஹேக்கரின் சொந்த சர்வரில் நகலெடுத்தார். ஸ்டேன் சுவாமியின் கணினி காவல்துறையினரால் கைப்பற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஹேக்கர் அவரது செயல்பாடுகளைச் சுத்தம் செய்து, மால்வேர் மற்றும் கண்காணிப்புத் தரவை அகற்றினார் என்று கூறுகிறது. வாஷிங்டன் போஸ்ட், “சுவாமியின் கணினியில் இருந்து மீட்கப்பட்ட மூல தரவுகளின் ஸ்கிரீன்ஷாட்களை ஹேக்கரின் செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது என்று வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.
இருப்பினும், ஆர்சனலின் நிறுவனம் இதற்கான ஆதாரங்கள் எதையும் அந்த அறிக்கையில் சேர்க்கவில்லை.மேலும் அந்த அறிக்கைகளில் பல முரண்பாடுகள் காணப்பட்டன.முக்கிய பிரச்சனை என்னவென்றால், சாதனங்களில் காணப்படும் ஆஃப்லைன் வேர்ட் மற்றும் பி.டி.எப் கோப்புகளை மட்டுமே அந்த நிறுவனம் இதற்கு ஆதாரமாக நம்பியிருந்தது.அவை ஹேக்கர்களால் இணைக்கப்பட்டவை என்று கூறுகிறது.ஆனால், போலி மின்னஞ்சல் அல்லது பிற ஒத்த தகவல்தொடர்புகள் பற்றிய குறிப்புகள் எதுவும் இதில் இடம்பெறவில்லை.
ஆர்சனல் கன்சல்டிங்கின் ரோனா வில்சன் அறிக்கையில் பல பி.டி.எப், ஆர்.டி.எப் (ரிச் டெக்ஸ்ட்), ஓ.ஆர்.ஜி கோப்புகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் எதுவும் மின்னஞ்சல்கள் தொடர்பானவை அல்ல. பி.எஸ்.டி மற்றும் ஓ.எஸ்.டி கோப்புகள் போன்ற அறியப்பட்ட எந்த மின்னஞ்சல் தரவுத்தள கோப்புகளையும் அந்த அறிக்கை குறிப்பிடவில்லை. மேலும் எந்த போலி மின்னஞ்சலையும் அது குறிப்பிடவில்லை.எனவே, தோழர் பிரகாஷுடன் ரோனா மின்னஞ்சல்களை பரிமாறிக்கொண்டதாக குற்றப்பத்திரிகை கூறினாலும், ‘தடயவியல் அறிக்கை’ ஆஃப்லைன் ஆவணக் கோப்புகளை மட்டுமே மீட்டுள்ளது.மின்னஞ்சல்கள் போலியானவை என்று கூறக்கூடிய ஆதாரங்கள் எதுவும் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை. இதேபோல வில்சனின் லேப்டாப், சாதனத்தில் காணப்படும் கோப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பதிப்பை விட MS Wordன் வேறுபட்ட பதிப்பைக் கொண்டிருந்தது என்று அந்த நிறுவனம் கூறியது. ஆனால் அந்த கோப்புகள் இடைசொருகல் என்பதை இது உறுதியாக நிரூபிக்க முடியாது.ஒருவேளை இந்த, கோப்புகளை வேறு சாதனத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் வில்சனால் லேப்டாப்பில் நகலெடுக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், ஸ்டேன் சுவாமிக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் இடையே 140 மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நடந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மின்னஞ்சல்களின் உள்ளடக்கத்தை ஆராயாமலேயே நீதிமன்றம் முடிவுக்கு வந்தது என்று கூறப்பட்டாலும், மின்னஞ்சல்கள் அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பதை வலுவாக நிரூபிக்கிறது. இது இவ்வழக்கில் விசாரணையில் இருக்கும் நகர்ப்புற நக்சல்களை நிரபராதிகள் என்று நிரூபிப்பதற்காக ஆர்சனல் கன்சல்டிங் நிறுவனமும், வாஷிங்டன் போஸ்ட் நிறுவனமும் மக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றன என்பதையே வெளிப்படுத்துகிறது என இத்துறை குறித்து அறிந்த நிபுணர்களால் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.