அமுல் வர்த்தக முத்திரை வழக்கு

பாரதத்தின் மிகப்பெரிய பால், பால் பொருட்கள் பிராண்டான அமுல் டெய்ரி, கனடாவை சேர்ந்த சாந்து தாஸ், ஆகாஷ் கோஷ், மோஹித் ராணா, படேல் ஆகியோர், ‘லிங்க்ட்இன்’ சமூக வலைத்தளத்தில் ‘அமுல் கனடா’  என்ற பெயரில் ஒரு பக்கத்தை உருவாக்கி, தங்களை அமுல் நிறுவனத்தின் ஊழியர்களாக காட்டிக்கொண்டனர். மேலும் அக்குழுவினர் அமுல் நிறுவன முத்திரையையும் அனுமதியின்றி பயன்படுத்தினர். இந்த மோசடியை அறிந்த அமுல் நிறுவனம் வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கை விசாரித்த கனடாவின் அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியம், வர்த்தக காப்புரிமை மீறலுக்காக அமுலுக்கு ரூ. 19.59 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த அந்நிறுவனத் தலைவர் ​​ஆர் எஸ் சோதி, “நாங்கள் எச்சரிக்கையாக இருந்ததால் இது சாத்தியமானது. இதுபோன்ற தீர்ப்புகள், உலக அளவில் அறிவு சார் திருட்டு, வர்த்தக காப்புரிமை மீறல்களை தடுக்கும்’ என தெரிவித்தார்.