‘சீன, பாகிஸ்தான் அத்துமீறல்களை தடுக்கவும், பரந்த எல்லைகளைக் கொண்ட நம் பாரத எல்லைப்புற பாதுகாப்பை அதிகரிக்கவும் அமெரிக்காவின் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 30 எம்.க்யூ – 9 பி பிரிடேட்டர் வகை டிரோன்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ. 21,900 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்துக்கு அடுத்த மாதம் ஒப்புதல் வழங்கப்படும். இவ்வகை டிரோன்கள் 1,700 கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமந்தபடி 48 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டது’ என மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.18.25 லட்சம் கோடி செலவில், ராணுவத்தை நவீன மயமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.