அரசு ஊழியர்களுக்கான சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிகளில் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, உளவுத்துறை அல்லது பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள் தங்கள் அமைப்பு தொடர்பான எந்தவொரு தகவலையும் அதிகாரத்தின் அனுமதியின்றி வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.திருத்தப்பட்ட விதிகளின்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் இரண்டாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், ஓய்வு பெற்றதும், அந்த அமைப்பின் களம், செயல்பாடுகள், நிபுணத்துவம் உள்ளிட்ட எந்தவொரு தகவலையும் எந்த விதத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தடை விதிகப்பட்டுள்ளது.