வசிப்பிட சான்று விதிகளில் திருத்தம்

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு, அங்கு வாழும் படியலினத்தவர், பிற சிறுபான்மையினர், பெண்கள் என பலரின் உரிமைகளும் மீட்டெடுத்து மீண்டும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவ்வகையில், ஜம்மு காஷ்மீர பெண்கள் வெளி மாநிலத்தவரை மணந்தால் அவர்களுக்கான சொத்து உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் முன்பு பரிக்கப்பட்டன. தற்போது, அவர்களுக்கு அந்த உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் கணவர், குழந்தைகளுக்கும் அங்கு வசிப்பிட சான்று அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொது நிர்வாகத் துறை (ஜி.ஏ.டி) ஆணையரும் செயலாளருமான மனோஜ் திவேதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு’ என குறி இந்த சட்டத் திருத்தத்தை பா.ஜ.க பாராட்டியுள்ளது. முன்னதாக, கடந்த 2019ல் பிரதமர் மோடி, “எங்கள் மற்ற மாநிலங்களில் உள்ள மகள்கள் பெற்றுள்ள உரிமையை, ஜம்மு-காஷ்மீரில் உள்ள மகள்கள் இழந்துவிட்டனர்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.