உலகளாவிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான், அமெரிக்கன் பாப்திஸ்ட் மிஷன் மூலம் கிறிஸ்தவர்களின் மதமாற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. பாரதத்தில் மிகப் பெரிய மிஷனரி மதமாற்றப் பணிக்கு நிதியுதவி செய்ய அமேசான் மற்றும் ஏ.பி.எம் நிறுவனத்தால் பணமோசடி வளையம் உருவாக வாய்ப்பு உள்ளது. அமேசான் நிறுவனம், ஒரு இந்தியரும் அதில் வாங்கும் பணத்தை நன்கொடையாக அளிப்பதன் மூலம் ஆல் இந்தியா மிஷனின் மாற்றத் தொகுதிக்கு நிதியளிக்கிறது என அருணாச்சல பிரதேசத்தின் சமூக நீதி மன்றம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசு இந்த விவகாரத்தை ஆராய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கன் பாப்டிஸ்ட் மிஷன் இந்தியாவில் ‘ஆல் இந்தியா மிஷன்’ (AIM) எனப்படும் பெயரில் இயங்குகிறது. வடகிழக்கு பாரதத்தில் 25 ஆயிரம் பேரை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்ததாக தங்கள் இணையதளத்தில் வெளிப்படையாக கூறியுள்ள அமைப்பு இது.