விவசாயிகளுக்கு என்றுமே ஆதரவு

பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணைச் செயலாளருமான அபராஜிதா சாரங்கி, ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘பா.ஜ.க விவசாயிகளுக்கு என்றுமே ஆதரவாக நிற்கிறது, எப்போதும் அவர்களுடன் நிற்கும். இதனை விவசாயிகள் புரிந்து கொண்டுள்ளனர் என்று நாங்கள் நம்பிக்கையுடன் கூறுகிறோம். அவர்கள் தற்போதைய பிரச்சினைகளையும் நன்றாகவே அறிவார்கள். விவசாயிகளின் பிரச்சினைகளைப் பொருத்தவரை, அவர்களுக்கு தங்கள் குறைகளை வெளிப்படுத்தவும், அரசாங்கத்திடம் பிரச்சினைகளை முன்வைக்கவும் முழு உரிமை உண்டு. மூன்று விவசாய சட்டங்களும் விவசாய சமூகத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் என்று அரசு கருதியதால் அவை கொண்டு வரப்பட்டன. ஆனால் துரதிருஷ்டவசமாக அதற்கு எதிரான பிரச்சாரங்களாலும் விவசாயிகளை அரசால் நம்ப வைக்க முடியாததாலும் நமது விவசாயிகள் எந்தவிதமான அசெளகரியத்தையும் எதிர்கொள்ளக்கூடாது என பா.ஜ.க தலைமை கருதியதாலும் அவை விலக்கிக் கொள்ளப்பட்டன. ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, உத்தரபிரதேசத்தில் 73 சதவீத வாக்காளர்கள் பா.ஜ.க மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் ‘ என தெரிவித்தார்.