வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

மத நல்லிணக்க செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கோவை சென்றிருந்த பா.ஜ.க சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், கிறிஸ்தவ பாதிரியார் பிரின்ஸ் தளியத்தை சந்தித்து பேச்சு நடத்தினார். சிறுபான்மையினர் நலன் கருதி பா.ஜ.க அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி விளக்கினார். இதுகுறித்து வேலூர் இப்ராஹிம் பேசுகையில், சிறுபான்மை மக்களை பா.ஜ.கவில் இணைக்கும் நோக்கத்துடன், கோவை வந்துள்ளேன். தற்போது 20 பேர் இணைந்துள்ளனர். மேலும் பலர், இம்மாத இறுதியில் நடக்கும் விழாவில், பாதிரியார் பிரின்ஸ் தளியத் முன்னிலையில் கட்சியில் இணைவார்கள். தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடந்துகொண்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன. தி.மு.க அரசு சிறுபான்மையினருக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால், மத்திய அரசு ஏராளமான நன்மைகளை செய்துள்ளது. பிரதமர் மோடி, சிறுபான்மையினர் கல்விக்காக மட்டும், 5,126 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்” என தெரிவித்தார். மேலும், தனக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.