அகிலேஷ் முதலிடம்

உத்தரபிரதேச மாநில 2014 மற்றும் 2017களில் நடைப்பெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் மோசமாக தோல்வியடைந்த சமாஜ்வாதி கட்சித் தலைவரும் முன்னாள் உத்தர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ், 2019 மக்களவைத் தேர்தலுக்காக தன் பரம எதிரியான மாயாவதியுடன் ஒப்பந்தம் செய்து தேர்தலை சந்தித்தார். ஆனால் அந்த சந்தர்ப்பவாத கூட்டணியும் தோல்வியடைந்தது. உ.பி.யில் அவர் கட்சி போட்டியிட்ட 80 மக்களவை இடங்களில் 5 இடங்களை மட்டுமே அவரது கட்சி வென்றது. அசம்கரில் போட்டியிட்டு லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அகிலேஷ். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ‘அவர் அசம்கருக்கு அதிகம் விஜயம் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் தனது தொகுதி குறித்து கேள்விகளை எழுப்பவில்லை என்பதுடன் நாடாளுமன்றத்தில் 36 சதவீத வருகை மற்றும் பூஜ்ஜிய கேள்விகளுடன், அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மிக மோசமாக செயல்படும் எம்.பியாக உள்ளார்’ என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.