அகாரா பரிஷத் கோரிக்கை

அகில் பாரதிய அகார பரிஷத் (ஏ.பி.ஏ.பி) தலைவர் மஹந்த் நரேந்திர கிரி, ‘நாட்டில் மதம் மற்றும் சமூக கட்டமைப்பு சமநிலையை பராமரிப்பதற்காக மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இந்த மசோதா விரைவில் சட்டமாக்கப்பட வேண்டும். இச்சட்டம் அனைத்து மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். தலிபான்களுக்கு ஆதரவாக சிலர் பேசுவது குறித்து அவர் பேசுகையில், ‘தலிபான்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தலிபான்களுக்கு ஆதரவளிக்கும் தங்கள் சமூக மக்கள் மீது முஸ்லிம் மதத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாபாரதத்தின்படி ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் அக்காலத்தில் ஹிந்து மன்னர்களால் ஆளப்பட்டது. இன்று அங்குள்ள ஹிந்துக்களும் சீக்கியர்களும் ஆப்கனைவிட்டு பயந்து வெளியேறுகின்றனர். வருங்காலத்தில் பாரதத்தில் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு அப்பட்டமான உதாரணம்’ என தெரிவித்தார்.