காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே ஆண்டனி டெல்லிக்கு கடந்த செப்டம்பர் 27ம் தேதி சென்றார். கட்சித் தலைவர் சோனியா காந்தி அழைத்ததால் தான் டெல்லி செல்கிறேன் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். கட்சித் தலைவர் தேர்தல், ராஜஸ்தானில் கட்சி மற்றும் மாநில அரசாங்கத்தின் அதிகாரப் போட்டி தொடர்பாக காங்கிரஸ் எதிர்கொள்ளும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஆலோசனை வழங்குவதற்காக டெல்லிக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என பத்திரிகைகளில் செய்தி பரவியது. ஆனால், உண்மை என்னவெனில், காங்கிரஸ் கூட்டணியின் இரண்டாம் யு.பி.ஏ ஆட்சிக்காலத்தில் ராணுவத்துக்கு வாங்கப்பட்ட டாட்ரோ டிரக் ஒப்பந்தத்தில் நடைபெற்ற ரூ.14 கோடி ஊழல் தொடர்பான விசாரணைக்காக சி.பி.ஐ நீதிமன்றத்தால் ஏ.கே ஆண்டனி உள்ளிட்ட சிலரை செப்டம்பர் 27ம் தேதி ஆஜராக டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கவே அவர் சென்றார். ஆனால், அதனை மறைத்து சோனியா அழைத்ததால் சென்றதாக கூறியுள்ளார்.