அஜ்மீர் தர்காவின் தலைவர் தீவான் ஜைனுல் அப்தீன் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதர்களுக்கு எதிராக எந்த மதமுமே வன்முறையை போதிக்கவில்லை. இஸ்லாம் அமைதியை வலியுறுத்துகிறது. இணையத்தில் வெளியான மிக மோசமான வன்முறை வீடியோ பதறவைக்கிறது. அதைச் செய்தவர்கள் எவ்வித நேர்மையுமில்லாதவர்கள். ஏழை நபர் மீது மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் வன்முறையை பாதையாகக் கொண்டவர்கள். இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாரதத்தில் தலிபான் மனநிலை ஓங்க பாரத முஸ்லிம்களாகிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் தாய்நாட்டை பாதுகாப்போம்” என்றார். ஜமாத் உலேமா இந்த் பொதுச் செயலாளர் மவுலானா ஹகிமுதீன் காஸ்மியும் இந்த படுகொலையை கண்டித்துள்ளார்.