பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாடங்களை, ‘மேக் இன் இந்தியா 2’ திட்டத்தின் கீழ் தயாரிக்க, மத்திய அரசு முடிவு செய்து, தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தில் பாதுகாப்பு தொழில் பெருவழி தடங்களை அறிவித்தது.தமிழகத்தில் அமையும் பெருவழிதடம் வாயிலாகராணுவ தளவாட உற்பத்தியில் கணிசமான வழங்க முடிவெடுத்துள்ள தமிழக அரசு,, அத்துடன் இணைந்து சென்னை விமான நிலையம் அருகேவிமான பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.சென்னை விமான நிலையம் அருகே, 100 ஏக்கர் பரப்பளவில் விமான பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் செய்யும் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்த பூங்கா அமைப்பதற்கான முதல் கட்ட அனுமதி கோரி, விமான போக்குவரத்து துறைக்கு, தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இதற்கான அனுமதி கிடைக்கும்பட்சத்தில், விரைவில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணுவ தொழில் பெரு வழித்தடத்தில், இந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.ஏற்கனவே, ஸ்ரீபெரும்புதுாரில் 3.5 லட்சம் சதுர அடியில், 230 கோடி ரூபாயில் வானுார்தி பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.