விசித்திர நிபந்தனை விதிக்கும் ஏ.ஐ.எம்.ஐ.எம்

உத்தரப்பிரதேச தேர்தலில் எங்கள் வேட்பாளர்களை 100 இடங்களில் நிறுத்தபோகிறோம். என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்திருந்தார். ஏ.ஐ.எம்.ஐ.எம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என செய்திகள் வெளியாகின. அதனை, மாயாவதி மறுத்தார். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி ஒருவேளை, உ.பி. தேர்தலில் வெற்றி பெற்றால், அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் ஒரு முஸ்லிமை மட்டுமே துணை முதல்வராக நியமிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் துணை முதல்வராக ஒரு முஸ்லிமை நியமிக்க வேண்டும் என்ற ஒரு விசித்திர நிபந்தனையை விதித்துள்ளார் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சையத் அசிம் வக்கார். உங்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சியான ‘பகிதரி சங்கல்ப் மோர்ச்சா’ இக்கோரிக்கையை ஏற்குமா என்று கேட்கப்பட்டபோது, ​​அக்கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் தனது முன்மொழிவை நிச்சயமாக ஏற்க மாட்டார் என்றும் வகார் கூறினார்.