பொறியியல் பட்டப்படிப்பு படிக்க, பள்ளிக் கல்வியில் இயற்பியலும், கணிதமும் கட்டாயம் என்ற நிலை முன்பு இருந்தது. இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுவான ஏ.ஐ.சி.டி.இ, பொறியியல் பட்டப்படிப்பிற்கு கணிதம், இயற்பியலை விருப்பப் பாடங்களாக மாற்றி அறிவித்தது. இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்தே அமலாகும் எனவும் தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழு, தனது அறிவிப்பை தற்காலிகமாக திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கு கணிதமும் இயற்பியலும் மீண்டும் கட்டாயமாகியுள்ளது.