சமீபத்தில் டி.ஆர்.டி.ஓ மேம்படுத்தப்பட்ட தூரம் அதிகரிக்கப்பட்ட புதிய பினாகா ராக்கெட், ஒடிசா கடலோரப் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து பலகுழல் ராக்கெட் லாஞ்சர் உதவியுடன் வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. 45 கி.மீ வரை சென்று தாக்க கூடிய இந்த ராக்கெட்டுகள், இலக்கை நோக்கி அடுத்தடுத்து வேகமான செலுத்துதல் முறையில் 25 ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா, விரைவில் அக்னி-1 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ரகமான புதிய அதிநவீன ‘அக்னி ப்ரைம்’ ஏவுகணையை பரிசோதிக்க உள்ளது. இந்த இரட்டை அடுக்கு ஏவுகணை, அக்னி 1ஐ விடவும் இலகுவாக இருக்கும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 28ம் தேதி இந்த ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் இருந்து சோதனை செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.