பாகிஸ்தானில் ஆப்கன் கோஷங்கள்

பாகிஸ்தானில் பயிலும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர்கள், ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதும் ஆப்கானிஸ்தான் கொடிகளை கைகளில் ஏந்தி பாக்டியா மாகாணத்தில் உள்ள எஃப் -9 பூங்காவில் கோஷம் எழுப்பினர். தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறையினர் அங்கு சென்றனர். பல மாணவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். ஐந்து பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அட்டையை கைப்பற்றினர். எனினும் அவர்கள் மீது எந்த வழக்கையும் பதியாமல் சில மணி நேரங்களில் காவல்துறையினர் விடுவித்தனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த சம்பவம் தலிபான்களின் அடுத்த இலக்கு என்ன என்பதன் முன்னோட்டமாக அங்குக் கருதப்படுவதால் அந்நாட்டு அரசை இது கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.