காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானின் முதல்வர் அசோக் கெலாட், தடுப்பூசிகள் குறைவாக கிடைப்பதாகக் கூறி மத்திய அரசைக் குற்றம் சாட்டி வருகிறார்.ஆனால், நாட்டில் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கிய ஜனவரி 16 முதல் தற்போதுவரை 11.5 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி மருந்தை அம்மாநில அரசு வீணடித்துள்ளது.சமீபத்தில், ராஜஸ்தானில் குப்பைத் தொட்டிகளில் 2,500 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு அமலில் இருக்கும் பொது முடக்கம் ஜூன் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆனால், மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் கொரோனா நேர்மறை விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக சென்று கொண்டுள்ளது.
பொதுமுடக்க காலத்திலும்கூட, அங்கு குற்றங்கள் குறையவில்லை.குற்றவாளிகளை அம்மாநில அரசு கட்டுப்படுத்த தவறியுள்ளது.ஜெய்ப்பூரில் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெற்றது.பரத்பூரில் ஒரு மருத்துவர் தம்பதியினர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஸ்ரீ கங்காநகரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காலமானா தன் தாய் தந்தையின் பெயரில் உள்ள ஆதார் எண்ணை பயன்படுத்தி சம்பந்தமில்லாத ஸ்ரீ கங்கா நகர் என்ற இடத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என பிரவீன் காந்தி என்பவர் புகார் அளித்துள்ளார். இது போன்று வரும் தொடர் செய்திகள் அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதையே எடுத்துக்காட்டுகிறது.