ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற ஹிந்து மத வழிபாட்டு தலமான மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகரான ஷாருக்கான் நேற்று முன்தினம் இரவு சென்று வழிபாடு நடத்தினார். யாரும் அடையாளம் கண்டுகொள்ளாதவாறு தனது முகத்தை மறைத்து உடை அணிந்திருந்த ஷாருக் கான் தனது தனிப்பாதுகாவலர்கள் மற்றும் சில காவலர்கள் பாதுகாப்புடன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். ஹிந்துகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள பல பாலிவுட் நடிகர்களில் ஷாருக்கானும் ஒருவர் என கூறப்படுகிறது.சமீபத்தில் இவரது மகன் போதை மருந்து வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்றார். பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவையடுத்து இறுதி அஞ்சலி செலுத்த சென்ற ஷாருக்கான், அங்கு அநாகரீகமாக எச்சிலை துப்பிய சர்ச்சையிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல சில நாட்களுக்கு முன், மற்றொரு பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், சமீபத்தில் ‘அமீர்கான் புரொடக்ஷன்ஸ்’ என்ற தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் ஹிந்து முறைப்படி பூஜைகளை செய்து திறந்து வைத்தார். தனது படங்களில் எல்லாம் ஹிந்து மத துவேஷத்தையும் ஹிந்துக்களை கேலி செய்வதையும் வழக்கமாக தொடர்ந்து செய்துவந்த அமீர்கான், தனது லால் சிங் சத்தா படம் படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ஹிந்துக்களுக்கு எதிரான விமர்சனத்தை தவிர்த்து வருகிறார். நாட்டை அவமதிக்கும் வகையிலும் அமீர் கான் அடிக்கடி பேசி வருபவர்.கடந்த ஓராண்டாகவே ‘பாய்காட் பாலிவுட்’ என்ற ஹேஷ்டேக்கை மக்கள் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஹிந்துக்களுக்கு எதிரான, நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட பாலிவுட் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் இந்த பாய்காட் பாலிவுட் என்ற ஹேஷ்டேக்கோடு, அந்த நடிகரின் பெயரையும் படத்தின் பெயரையும் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதையடுத்து, தனது படங்கள் வரலாறு கானாத வகையில் தோல்வியைத் தழுவி வருவதையடுத்து, நான் ஹிந்துக்களுக்கு எதிரியல்ல, நாட்டுக்கும் எதிரியல்ல, நானும் தேசப்பற்று மிக்கவன்தான் என்றெல்லாம் புலம்பித்தள்ளிய அமீர்கான், தயவு செய்து என்னுடைய படத்தை புறக்கணிக்காதீர்கள் என்று ஹிந்துக்களிடம் கெஞ்சினார் என்பது நினைவு கூரத்தக்கது.