மிஷனரி பள்ளி மீது நடவடிக்கை

மத்தியப் பிரதேச மாநிலம், திண்டோரியில் உள்ள கிறிஸ்தவ மிஷனரி பள்ளி ஒன்றில் பாதிரி, கன்னியாஸ்திரி, பள்ளி முதல்வர் மற்றும் கௌரவ ஆசிரியர் ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சமீபத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளி ஜுன்வானி கிராமத்தில் அமைந்துள்ளது, இது ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகத்தின் ஜபல்பூர் மறைமாவட்ட கல்வி சங்கத்தால் (JDES) நடத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. திண்டோரி காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் சிங்கின் கூற்றுப்படி, பள்ளியின் முதல்வர் நான்சிங் யாதவ் மற்றும் கௌரவ ஆசிரியர் கேமசந்திரா மீது போக்சோ சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டத்தின் விதிகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் பராமரிப்பாளர் பாதிரி சன்னி மீது, சிறுமிகளின் இந்த புகார்களைக் கவனிக்காததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளார், அதே நேரத்தில் கன்னியாஸ்திரி சவிதா, சிறுமிகளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பள்ளியின் அதிபர் மாத்திரமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார். 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் வசிக்கும் ஜே.டி.இ.எஸ் விடுதியில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (எஸ்.சி.பி.சி.ஆர்) சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தது. இதுகுறித்து எஸ்.சி.பி.சி.ஆர் உறுப்பினர் ஓம்கார் சிங் கூறுகையில், “காட்டில் உள்ள விடுதிக்கு சென்று பார்த்தபோது, மாணவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டோம். கலந்துரையாடலின் போது, 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 8 மாணவிகள், வகுப்பறைகளில் தனியாக அழைத்து, தலைமை ஆசிரியரும், ஆசிரியரும் தங்கள் உடல் உறுப்புகளைத் தொடுவதாகத் தெரிவித்தனர். சிறுமிகள் மோசமான மனநிலையில் இருப்பதாகவும், கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்துள்ளனர். சில சிறுவர்களும் அவர்களுடன் துன்புறுத்துவதை கூறினார்கள், ஆனால் அவர்கள் அதனை அதிகம் வெளிப்படுத்தவில்லை. மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் விசாரணை தொடரும். அப்போது மேலும் விவரங்கள் வெளிவரும்” என தெரிவித்தார். மேலும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) தலைவர் பிரியங்க் கனூங்கோ பள்ளிக்குச் சென்றார். பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து அவர்களுக்கு இடமாற்றம் செய்ய உதவினார். அவரது ஒரே விஜயத்தில், குற்றவாளிகளுக்கு எதிராக ஏழு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன, இதில் அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பள்ளி ஆவணங்களில் இருந்து மீட்கப்பட்ட ஞானஸ்நானம் தொடர்பான பாரிய தரவுகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை என்றும் அவர் வெளிப்படுத்தினார். இதனிடையே, கைது செய்யப்பட்ட அதிபரை காவல்துறை உடனடியாக விடுவித்ததாக உள்ளூர் பத்திரிகை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.