வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அளித்த பேட்டியில், நமது தேசத்தில் ஒரே ஆண்டில் 157 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம். இதற்கு, பிரதமர் மோடியே காரணம். கொரோனா தடுப்பு நடவடிக்கையில், பாரதம் உலகிற்கே வழிகாட்டியாய் திகழ்கிறது. தடுப்பூசி செலுத்தியதால் தான், தொற்று அதிகரித்தாலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. மோகன் லாசரஸ் என்ற கிறிஸ்தவ மதபோதகர், கிறிஸ்தவ மக்களிடம் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்றும், செலுத்தினால் பல பிரச்னைகள் உருவாகும் என்றும் தவறாக வதந்தி பரப்புகிறார். தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக, மக்களை துாண்டி விடும் வகையில் பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. மதத்தின் பெயரால் வதந்தி பரப்புவது உயிரை பலி கொடுப்பதற்கு சமம். எனவே, வதந்தி பரப்புவோர் மீது, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.கவினர் ஆட்சிக்கு வந்ததும், தடுப்பூசி கிடைக்கவில்லை என பிரசாரம் செய்தனர். ஆனால், இதுவரை தமிழகத்தில் 8.98 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கு தி.மு.கவினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என்று கூறினார்.