பாரதத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் வேளையில், ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்துக் கொள்ள, கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம், மக்கள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என பல பாதுகாப்பு நடவடிக்களை அரசு அறிவித்திருந்தாலும், எதோ ஒரு வகையில் கொரோனா தொற்று அங்கு ஏற்பட்டுவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து, ஜூனா அகாரா மகாமண்டலேஷ்வர், சுவாமி அவ்தேஷானந்த் ஆகியோருடன் கும்பமேளாவில் நடைபெறும் கங்கைக் குளியல், கொரோனா தாக்கம், சாதுக்களின் உடல்நிலை குறித்து பேசியுள்ளார். இதனை ஏற்று, அனைத்து சாதுக்களும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உறுதி தெரிவித்துள்ளனர். இதற்கு பிரதமர் மோடி, அவர்கள் அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.
இதன்படி, ‘குஜராத், மகாராஷ்டிரா உட்பட பாரதத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த சாதுக்கள் அனைவரும் உடனடியாக அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏப்ரல் 17 அன்றுடன் இந்த கும்பமேளா நிறைவு பெறுகிறது. ஏப்ரல் 27ல் நடைபெறும் முக்கிய கும்பமேளா குளியலில், பஞ்சாயத்து நிரஞ்சனி அகாடாவைச் சேர்ந்த ஒரு சில சாதுக்கள் மட்டுமே பங்கேற்பார்கள்.
நமது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. இதுவும் தனிப்பட்ட விஷயம் அல்ல. இது ஒரு சமூக பிரச்சினை, மக்களின் நல்வாழ்வுக்கான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்’ என ரவீந்திர பூரி மகாராஜ், செய்தி நிறுவனங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.