கர்நாடகாவில் கல்வீச்சு கைதுகள்

கர்நாடக மாநிலம் ஹூப்ளி காவல் நிலையத்தில் கல் வீச்சு சம்பவம் நடைபெற்றதுத் தொடர்பாக அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சியை சேர்ந்த அப்பகுதித் தலைவர் நசீர் அகமது ஹொன்வால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், ஹூப்ளி தார்வாட் மாநகராட்சி உறுப்பினர் கணவர். இம்மாவட்டத்தில் சமூக வலைதளப் பதிவின் காரணமாக ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 134 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. “சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது. அதைத் தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்,” என்றார் அம்மா நில முதலவர் பசவராஜ் பொம்மை. கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக், “வன்முறைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உத்தரபிரதேச மாதிரியுடன் பாடம் கற்பிக்கப்படும்” என எச்சரித்தார்.