ஏ.பி.ஜி.பி கோரிக்கை மனு

நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பான அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் (ஏ.பி.ஜி.பி) தேசிய நிர்வாக குழு கூட்டம் ,செப்டம்பர் 2 அன்று நாக்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஐ.நா சபையின் தீர்மானம், மற்றும் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்கள் தூய குடிநீர் பெறுவது பொதுமக்களுக்கான அடிப்படை சுதந்திரம் என வலியுறுத்துகின்றன. எனவே தூய பாதுகாப்பான (ஆர்.ஓ குடிநீர்) குடிநீரை மக்களுக்கு விநியோகிப்பது மற்றும் தற்போதுள்ள ஆர்.ஓ முறை நீர் சுத்திகரிப்பில் குடிநீரில் இருக்க வேண்டிய அத்தியாவசியமான தாது உப்புக்கள் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. எனவே, குடிநீர் சுத்திகரிப்பு முறைகள் முறைபடுத்தப்பட வேண்டும்,  தளர்வாக விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானம் கோரிக்கை மனுவாக மத்திய சுகாதார துறை அமைச்சருக்கு, ஏ.பி.ஜி.பி மாநில இணை செயலாளர் ச. சத்யபாலன், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரி  மருத்துவர் எஸ். கண்ணபிரான் மூலமாக அளிக்கப்பட்டது.