ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல மக்கள் குறை தீர்ப்பு அதிகாரியான டாக்டர். பாலுவை அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ஏ.பி.ஜி.பி) அமைப்பினர் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைகள், காப்புப் பிரதி அறிக்கைகள், தொலைதூர பகுதிகள் மற்றும் கிராமங்களில் உள்ள சாமானியர்களுக்கு உள்ளூர் மொழிகளில் குறுஞ்செய்திகள் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ஏ.பி.ஜி.பி சார்பில் அளித்தனர். அதிகாரியும், ஏ.பி.ஜி.பி பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியின் கமிட்டிக்கு எடுத்துச் சென்று மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.