ஆம் ஆத்மியின் பிளாக்மெயில்

சி.பி.ஐ சோதனை தொடங்கியவுடன், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, நான் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தால், தன் மீதான அனைத்து வழக்குகளும் மறைந்துவிடும் என்று பா.ஜ.கவிடம் இருந்து தனக்கு செய்தி வந்ததாக கூறியிருந்தார். இதுகுறித்து ஆஜ்தக் தொலைக்காட்சியில் பேட்டியளித்த அரசியல் செயல்பாட்டாளராக அறியப்படும் யோகேந்திர சலீம் யாதவ், ‘ஆம் ஆத்மியின் மூத்த தலைமை (கெஜ்ரிவால்) பா.ஜ.க தலைவர்கள் போல் நடித்து மோசடி அழைப்புகள் மூலம் தங்களது சொந்த கட்சியின் எம்.எல்.ஏக்களையே பிளாக்மெயில் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது’ என்று கூறியுள்ளார். மேலும், முன்னாள் ஆம் ஆத்மி தலைவர் பரம்ஜீத் சிங் இதே போன்ற குற்றச்சாட்டுகளை ஆஜ் தக் தொலைக்காட்சியிடம் பகிர்ந்துள்ளதையும் உதாரணமாக கூறினார். முன்னதாக, முன்னாள் ஆம் ஆத்மியின் சித்தாந்தவாதியான மணீஷ் ரைசாடா 2013ம் ஆண்டு எடுத்த ஒரு ஆவணப்படத்தில், முன்னாள் ஆம் ஆத்மி கட்யினரான பரம்ஜீத் சிங் கத்யால், தனக்கு 2 சிம் கார்டுகள் வழங்கப்பட்டதாகவும், நிதின் கட்கரி மற்றும் அருண் ஜேட்லி போன்ற பா.ஜ.க மூத்த தலைவர்களின் அலுவலகங்களில் இருந்து அழைப்பது போல் நடித்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை அழைக்குமாறு கெஜ்ரிவாலே தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கேட்டதால் அதனை தாம் செய்ததாகவும் கத்யால் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆதாரம்: https://www.opindia.com/2022/08/yogendra-yadav-busts-sisodia-claim-says-kejriwal-has-a-habit-of-arranging-fake-bjp-calls-to-blackmail-own-mlas/