‘கடைக்கோடியும் சென்றடைதல்’ பற்றிய நிதிநிலை அறிக்கை சம்பந்தமான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார். 2023 மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை சிறப்பாக அமல்படுத்துவதற்கு கருத்துக்களைப் பெறும் வகையில் நடைபெறும் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய 12 இணையவழிக் கருத்தரங்குகள் தொடரில் இது 4வது ஆகும். நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அரசு ஒரு படி முன்னேறி, நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு அது குறித்த கருத்துக்களை பங்குதாரர்களுடன் பரிமாறிக் கொள்ளும் புதிய நடைமுறையை கடந்த சில ஆண்டுகளாக தொடங்கியுள்ளது. அமலாக்கம் மற்றும் உரிய காலத்தில் விநியோகிப்பதன் கண்ணோட்டத்தில் இந்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான கருத்துப் பரிமாற்றம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக பயன்படுத்தப்படுவதையும் இது உறுதி செய்கிறது. சிறந்த ஆளுகையில் நாம் அதிக கவனம் செலுத்தினால் கடைசி மைலை சென்றடையும் நமது இலக்கை மிக சுலபமாக அடைய முடியும். ‘கடைக்கோடியும் சென்றடைதல்’ அணுகுமுறையும், முழுமையான நிலை என்ற கொள்கையும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது. அனைவரையும் சென்றடைவது என்பது நமது இலக்காக இருக்கும் போது ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழலுக்கு ஒருபோதும் வாய்ப்பு இருக்காது. ஊரகப் பகுதிகள் மற்றும் பழங்குடிப் பகுதிகளை சென்றடையும் தாரக மந்திரத்திற்கு இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது. பழங்குடி சமூகத்தின் மிகப்பெரிய திறனை முதன் முறையாக இந்த அளவுக்கு நாடு பயன்படுத்துகிறது. பழங்குடி சமூகத்தில் மிகவும் நலிவடைந்தவர்களுக்கான சிறப்பு இயக்கத்தின் கீழ் விரைவாக வசதிகளை அளிப்பதற்கு ஒட்டுமொத்த நாட்டின் அணுகுமுறை அவசியமாகிறது” என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.