ஸ்ரீராமர் கோயில் பிரம்மாண்டமாக அயோத்தியில் அமையவிருப்பதையொட்டி, அயோத்தியை, உலகத் தரம் வாய்ந்த ஒரு ஆன்மிக நகரமாகவும், சர்வதேச சுற்றுலா மையமாகவும் வளர்ப்பதற்காக உத்தரபிரதேச அரசு, பல்வேறு திட்டங்களை தயாரித்து வருகிறது. உலகத்தரம் வாய்ந்த விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், ஒலி ஒளிக் காட்சிகள், படகுச் சுற்றுலா, தங்கும் விடுதிகள், சாலைகள் என பல்வேறு விஷயங்கள் இதில் அடங்கும். இந்நிலையில், இதற்கான முதன்மை திட்டங்கள் அடங்கிய ஆவணங்களை வருகின்ற மார்ச் 25ல் பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். முதல்வர் யோகி ஆதித்தியநாத், ஏற்கனவே இரண்டு முறை இந்த ஆவணங்களை ஆய்வு செய்துள்ளார். எனினும் மூன்றாவது முறையாக நேற்று இந்த ஆவணத்தை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்தார்.