துருக்கி கடுமையன பூகம்பத்தால் பாதித்ததை அறிந்த பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்தார். அதன்படி மீட்புப் படையினர், மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பாரதத்துக்கான துருக்கி தூதர் ஃபிராட் சுனெல்லை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் வி.முரளிதரன், பாரதம் துருக்கியின் துயரில் பங்கு கொண்டுள்ளதை தெரிவித்தார். இது தொடர்பாக கருத்டுத் தெரிவித்த ஃபிராட் சுனெல், ”பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் துருக்கிக்கு உதவ பாரதம் முன்வந்ததை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். ‘தேவைப்படும்போது உதவுபவரே உண்மையான நண்பர்’ என்பதற்கு இணங்க பாரதத்தின் உதவி உள்ளது. நண்பர்கள் என்றால் ஒருவருக்கு ஒருவர் உதவுவது முக்கியம். பூகம்பம் ஏற்பட்ட முதல் 48 முதல் 72 மணி நேரங்கள் மிகவும் முக்கியமானவை. இதை உணர்ந்து பாரதம் மிகவும் விரைவாக செயல்பட்டுள்ளது. பாரதக்குழு தற்போது அங்கு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. உடனடியாக இரண்டாவது விமனத்தையும் பாரதம் அனுப்பியுள்ளது. பாரதத்தின் இத்தகைய கனிவு மிக்க இந்த உதவியை நாங்கள் பாராட்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்.