அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு புதிய மதுக்கொள்கையை கொண்டுவந்தது.இதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கேசக்சேனா, சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார்.இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.இதனையடுத்து அவசர அவசரமாக புதிய மதுக்கொள்கையை டெல்லி அரசு ரத்து செய்தது.கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் அரோரா சமீபத்தில் அப்ரூவராக மாறினார்.இந்நிலையில், பிரெஞ்சு ஒயின் நிறுவனமான பெர்னாட் ரிக்கார்ட் என்ற மதுபான நிறுவனத்தின் பொது மேலாளர் பினோய் பாபு மற்றும் அரவிந்தோ பார்மா நிறுவனத்தில் இயக்குநர் சரத் சந்திர ரெட்டி ஆகிய இருவரையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இது தொடர்பாக கைது செய்தனர். டெல்லி அரசின் புதிய மதுக்கொள்கையை உருவாக்கியதில் இந்த இருவருக்கும் முக்கியத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த கலால் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 34 முக்கிய நபர்கள், இதன் டிஜிட்டல் ஆதாரங்களை அழிப்பதற்காக மொத்தம் 140 அலைஅபேசிகளை (தோராயமாக ரூ. 1.20 கோடி) மாற்றியுள்ளதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. இதனிடையே, டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆதாயம் பெறுவதற்காக, டெல்லி அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகக் குழுக்களிடம் இருந்து 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்க இயக்குனரகம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது என்று டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.