மதவெறி தாக்குதல்

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் சீக்கிய சமூகத்தினரின் குருத்வாராவின் முன்னாள் கிராந்தியான (பூஜாரி) குர்பக்ஷ் சிங், ஐந்து மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். குர்பக்ஷ் சிங் அல்வாரின் ராம்கர் தாலுகாவில் உள்ள மிலாக்பூர் கிராமத்தில் வசிப்பவர். இப்பகுதியில் உள்ள முஸ்லிம் பெண்கள், சீக்கிய ஆண்களை திருமணம் செய்துகொண்டு மதம் மாறுவதை தடுக்கவே சில முஸ்லிம் நபர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக குர்பக்ஷ் சிங் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அவரது கண்களில் மிளகாய்பொடி தூவி, கண்களை துணியால் கட்டி தாக்கிய அவர்கள், அவரது முடிவில் தலையை வெட்ட அந்த மர்ம நபர்கள் யோசித்ததாகவும், பின்னர் அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அவரது தலைமுடியை வெட்டியதாகவும் கூறினார். காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். முன்னதாக, அலவாடா கிராமத்தில் வசிப்பவர், பெயர் குறிப்பிட விரும்பாமல், ஸ்வராஜ்யாவிடம், கடந்த ஏப்ரல் மாதம் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முஸ்லீம் பெண் ஓடிச்சென்று திருமணம் செய்தார். இது அங்கு பெரிய பிரச்சனையாகியது. அன்றிலிருந்து, அந்த சீக்கிய குடும்பத்திற்கு முஸ்லிம்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இன்றுவரை அவர்கள் அதிகம் வெளியே செல்லவில்லை. ஹரியானா மாநிலத்தின் எல்லையில் உள்ள அல்வார் மாவட்டம், அதிக குற்றங்கள் நடக்கும் ஒரு பகுதியாக உள்ளது. மாடு கடத்தல் மற்றும் படுகொலைகளுக்கு பெயர் பெற்றது. இங்குள்ள பூர்வீக மியோ ஜாதி மக்கள் பலரும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்களாக மாறியவர்கள். இதனையொட்டியுள்ள ஒரு பகுதியான ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில்தான், மியோ சமூகத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் சமீபத்தில் ஹரியானாவின்  காவல்துறை உயர் அதிகாரியை வெட்டிக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.