சர்ச் சொத்துகளை விற்ற பாதிரி

ரோமன் கத்தோலிக் தேவாலயங்களின் தலைமையிடமான பேராயம் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த, பேராயத்திற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை கடந்த 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டம் மைக்கல் பட்டியைச் சேர்ந்த பாதிரி சிரில் ராஜ் பராமரித்து வருகிறார். இக்காலகட்டத்தில் இவர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பேயராயத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார். பாதிரி சிரில் ராஜ் மோசடி செய்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் இல்லத்தின் நிர்வாகி ஜார்ஜ் ஸ்டீபன் தாம்பரம் நீதிமன்றத்தில் பாதிரி சிரில் ராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இவ்விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிரி சிரில் ராஜ் இதுவரை சுமார் 66 பேருக்கு சட்ட விரோதமாக ரூ. 11.68 கோடி மதிப்புள்ள நிலங்களை விற்பனை செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.