முஸ்லீம் இளைஞர்கள் தங்களை ஹிந்துக்களாக சித்தரித்துக்கொண்டு ஹிந்து பெண்களை ஏமாற்றும் பல வழக்குகள் சமீபகாலமாக வெளிவருவது அதிகரித்துள்ளது. அவ்வகையில், போலி ஹிந்து அடையாளத்துடன் ஹிந்து பெண்ணை கவர்ந்த மற்றொரு சம்பவத்தில், மே 29 அன்று பீகாரில் உள்ள கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் சட்டவுனியின் மதியடி காலனியில் இருந்து நிஷாந்த் ரேஜா என்ற முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டார். நிஷாந்த் ரேஜா த்னது மத அடையாளத்தை மறைத்து, நிஷாந்த் ராஜ் என்ற போலி ஹிந்து அடையாளத்துடன் மதியடிஹ் காலனியில் வசித்து வந்தார். நிஷாந்த் ரேஜாவிடம் இந்த இரு வேறு பெயர்களில் இரண்டு தனித்தனி ஆதார் அட்டைகள் இருந்தன. நிஷாந்த் ரேஜா தன்னை ஒரு ஹிந்து பிராமணர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு சட்டவுனியில் உள்ள மதியடியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தது தங்கினார். வீட்டு உரிமையாளரிடம், தான் ஒரு பத்திரிகையாளர், ‘தரங்’ என்ற ஊடகக் குழுவின் ஆசிரியர் என்றும் அவருக்கு வேலை வழங்குவதாகவும், அவரது சொத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதாகவும் கூறி அவருடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்டார். சிறிது நாட்கள் கழித்து, அவர் அந்த பெண்ணின் மருமகளையும் கவர்ந்தார். இருவரின் அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்தார். பிறகு, நிஷாந்த் ரேஜா அவர்களின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டினார்; அந்த பெண்ணின் சொத்தை தனது பெயரில் பதிவு செய்யுமாறு துன்புறுத்தினார். நிஷாந்த் ரேஜாவின் தொடர் துன்புறுத்தலால் வெறுப்படைந்த பெண்கள் இருவரும் பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று அவர் மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து காவலர்கள் அவரை கைது செய்தனர். நிஷாந்த் ரேஜா, இது போல பலரை பிளாக்மெயில் செய்பவர் என்று விசாரணையில் தெரிய வந்தது. மேலும் சில பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் அவரது அலைபேசியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.