மே 27, சனிக்கிழமையன்று, அருண்சிங், கோரசிங் மற்றும் கிருபால்சிங் ஆகிய மூன்று சீக்கிய சிறார்களை கொடூரமாக தாக்கியதற்காகவும் அவர்களில் ஒருவரின் மரணத்திற்கு வழிவகுத்ததற்காகவும் அக்ரம் படேல் என அடையாளம் காணப்பட்ட ஒரு முஸ்லிம் நபர் மற்றும் 4 அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக மகாராஷ்டிரா காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மே 26 அன்று அதிகாலை 3 மணியளவில் மூவரும் பன்றிகளைப் பிடிக்கச் சென்றுள்ளனர். பன்றிகள் இல்லாததால், அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அக்ரம் உள்ளிட்ட சுமார் 5 பேர் அவர்களை இத்கா அருகே தடுத்துள்ளனர். அவர்களை இரும்பு கம்பிகளால் கொடூரமாக தாக்கினர். இதனால் க பலத்த காயம் அடைந்த அவர்கலது கண்களில் காரமான பொருட்களை ஊற்றினார்கள். இடது கையையும் இடது காலையும் உடைத்தனர். பின்னர், அக்ரம், ‘அவர்களைக் கொல்லுங்கள் என்று கட்டளையிட்டார். அப்போது அவர்களில் ஒருவர் அருண்சிங்கின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கினார். கிருபால்சிங்கின் தலையில் குடலில் கடுமையாக அதனால் கிருபால்சிங் மயக்கமடைந்தார், அவர்கள் அழுது கத்தியதால், பலர் அங்கு கூடினர். அடிப்பதை நிறுத்துமாறும், அதற்கு பதிலாக காவல்துறையை அழைக்குமாறும் அக்ரமிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் பலனில்லை. அவர்கள் சிறார்களை மிக்க கொடூரமாகத் தாக்கினர். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறார்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பர்பானியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு மருத்துவர்கள் கிர்பால்சிங் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மற்ற இரு சிறுவர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கோரசிங்கிடம் வாக்கு மூலம் பெற்றனர். இந்த சிறார்களை திருடர்கள் என்று நினைத்து அவர்கள் தாக்கியதாக இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த விசாரணை நடைபெற்ரு வருகிறது. இதனிடையே, இவ்வழக்கில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302, 307, 341, 143, 147, 148, மற்றும் 149 மற்றும் மகாராஷ்டிரா காவல் சட்டம், 1951ன் பிரிவு 135 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாலும், போஸ்கோ சட்டத்தின் எந்தப் பிரிவுகளும் இதில் சேர்க்கப்படவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.