மிகப்பெரிய மதமாற்றத் திட்டம்

பாரதம் முழுவதும் உடனடியாக மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பதை பல்வேறு ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.அது அவ்வளவு அவசியம் என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் சென்னையில் நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.விஷன் 2030 நெகேமியா ஆலோசனைஎன்கிற பெயரில் கிறிஸ்தவ மிஷனரிகளை சார்ந்த 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மத பிரச்சாரகர்கள், பாதிரிகள், கடந்த ஜனவர் 10 மற்ரும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள ரேடிசன் புளு ஹோட்டலில் சந்தித்துக்கொண்டு கிறிஸ்துவ மதமாற்றங்களை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்துள்ளனர். அதில், நாட்டில், கிறிஸ்தவர்கள் இல்லாத அல்லது குறைவாக உள்ள சுமார் 4 லட்சம் கிராமங்களில் கிறிஸ்தவ மதமாற்றத்தை தீவிரப்படுத்துவதற்காகஅங்கு தலா ஒரு சர்ச் வீதம் சுமார் 4 லட்சம் சர்ச்சுகளை கட்டி குறைந்தது ஒரு கோடி பேரையாவது கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவிலான மதமாற்ற தடை சட்டம் எவ்வளவு அவசியம் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் தான்.